திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் குளியல் சோப் விற்பனை துவக்க விழா
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் குளியல் சோப் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.;
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட் டுறவு விற்பனைச் சங்கம் (டி.சி.எம்.எஸ்.) மூலம் தேங்காய்எண்ணெயில் இருந்து, இயற்கையான முறையில் குளியல் சோப் தயாரிக்கப்படுகிறது. இதன் முதல் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குளியல் சோப் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் செந்தில்குமார், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், திருச்செங்கோடு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் விஜயசக்தி, கூட்டுறவு சங்க தலைவர் திருமூர்த்தி, துணைப்பதிவாளர்கள் ரவிச்சந்திரன், மீனா அருள், முகமது சலீம், டி.சி.ம்.எஸ். பொது மேலாளர் மாதேசு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.