திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏலம்
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் (டி.சி.எம்.எஸ்) மஞ்சள் ஏலம் நடைபெற்து. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் 1,600 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சள் கொள்முதல் செய்தனர். ஏலத்தில், விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,102 முதல் ரூ.8,662 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,802 முதல் ரூ.7,609 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.10,412 முதல் ரூ.14,012 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்பிலான மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.