எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் இல்லம் தேடி கற்றல் கண்காட்சி

திருச்செங்கோடு கல்வி மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர் களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கல்வி கண்காட்சி நடைபெற்றது.

Update: 2022-02-28 02:30 GMT

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கற்றல் கண்காட்சியை திரளான மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் 5 குறுவள மையங்களுக்கு உட்பட்ட, 219 மையத்தில் பணியாற்றும் 219 தன்னார்வலர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. இக்கண்காட்சி மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ), குறுவளமையத்தின் தலைமை ஆசிரியர்கள், பள்ளிமேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இல்லம் தேடி கல்வியின் முதன்மை நோக்கமாக கற்றல் இடைவெளியை போக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கல்வி கண்காட்சியை பார்வையிட்டனர். கல்விக் கண்காட்சியில் தன்னார்வலர்கள் செய்த கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் மற்றும் மாணவர்களின் படைப்புகளும் இடம் பெற்றன.

Tags:    

Similar News