திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் ரூ.15.60 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

Cotton Market Price - திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் ரூ.15.60 லட்சம் மதிப்புள்ள பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-08-19 03:15 GMT

பைல் படம்.

Cotton Market Price -நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியின், மாணிக்கம்பாளையம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. திருச்செங்கோடு, எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம்பாளையம், ஜேடர்பாளையம், மனியனூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 447 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்கனாபுரம், ஈரோடு, அவிநாசி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.11,566 முதல் ரூ.12,466 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.10,899 முதல் ரூ.12,299 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பருத்தி விற்பனை செய்யப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News