திருச்செங்கோட்டில் 7,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்: 2 பேர் கைது

திருச்செங்கோடு அருகே விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 7,000 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

Update: 2021-12-13 03:00 GMT

பைல் படம்.

சேலம் உட்கோட்ட, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., அகிலன், சிறப்பு எஸ்.ஐ சத்தியபிரபு ஆகியோர் அடங்கிய குழுவினர், அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் சம்பவத்தன்று அதிகாலை, 5.30 மணிக்கு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த நாராயணம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், லைசென்ஸ் மற்றும் பில்கள் இல்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த 7,000 லிட்டர் டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது பயோ டீசல் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் போலி கலப்பட டீசல் என்பது தெரியவந்தது.

இதையொட்டி, 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் மற்றும் அதைக்கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சேலம்மாவட்டம் பூச்சிக்காட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகேசன் (55), கலப்பட டீசல் உரிமையாளர் மோகன்(54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News