திருச்செங்கோடு அருகே டூ வீலர் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (35), சுப்பிரமணி (50). இருவரும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து, பரமத்தி வேலூர் செல்லும் ரோட்டில், புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பிரிவு அருகில் டூ வீலரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி, சிவசக்தி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த கார், டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ், சுப்பிரமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் வந்த ராமகிருஷ்ணனின் மனைவி ஜீவிதா (21) என்பவரும் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து சென்ற திருச்செங்கோடு ரூரல் போலீசார் இறந்த 3 பேர் உடல்களையும் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஜீவிதாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.