நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் இடமாற்றம்: ஆட்சியர் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் 8 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.;
நாமக்கல் மாவட்டத்தில் 8 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் தாலுக்கா குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியர் சுரேஷ், இடமாறுதல் செய்யப்பட்டு, ராசிபுரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராசிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் இடமாறுதல் செய்யப்பட்டு, திருச்செங்கோடு ஆர்டிஓவின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்செங்கோடு ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் தங்கம், குமாரபாளையம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய சின்னதம்பி, நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தமிழ்மணி இடமாறுதல் செய்யப்பட்டு, நாமக்கல் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மாதேஸ்வரி, நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பச்சைமுத்து இடமாறுதல் செய்யப்பட்டு, திருச்செங்கோடு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய அப்பன்ராஜ் சேந்தமங்கலம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பொறுப்பை மணிகண்டன் கூடுதலாக கவனிப்பார்.
பணி மாறுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர்கள் இன்று 31ம் தேதி மாலை தற்போதுள்ள பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.