சேந்தமங்கலம் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது

சேந்தமங்கலம் அருகே கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-10-05 03:00 GMT

பைல் படம்.

சேந்தமங்கலம் அருகே உள்ள மேதரமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்கமல் (34), டிராக்டர் டிரைவர். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் மதுபான பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையொட்டி சேந்தமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் ராஜ்குமார் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து ராஜ்கமலை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News