பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள்: 15 நாட்களில் மீட்டு காெள்ள அறிவிப்பு
கொல்லிமலையில் போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்களை 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டுக் கொள்ளலாம்.;
கொல்லிமலைப் பகுதியில் போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்களை 15 நாட்களில் மீட்டுகொள்ளலாம்.
இது குறித்து கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுக்கா, வாழவந்திநாடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு வழக்குகளிலும் உரிமை கோரப்படாத மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள டூ வீலர்கள் வாழவந்திநாடு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் விபரங்கள் கொல்லிமலை தாலுக்கா அலுவலகம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கான ஆவணங்களை, 15 நாட்களுக்குள், போலீஸ் நிலையத்தில் சமர்ப்பித்து வாகனங்களை மீட்டுக் கொள்ளலாம். உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு அதில் கிடைக்கப்பெறும் தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.