எருமப்பட்டி அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் இருவர் கைது
Murder In Tamil - எருமப்பட்டி அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் போலீசார் இருவரை கைது செய்தனர்.;
Murder In Tamil - நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (46), விவசாயி. இவருக்கு எருமப்பட்டி அருகே கெஜகோம்பையில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சம்பவத்தன்று காலை அவரது விவசாய தோட்டத்தின் அருகே விவசாயி செல்வராஜ் உடலில் ரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற எருமப்பட்டி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, நில விவகாரம் தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக செல்வராஜின் அண்ணன் மனைவி தமிழ்ச்செல்வி, அவரது தந்தை மோகன் மற்றும் அவரது தம்பி கேசவன் (46), அவரது விவசாய தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளி கன்னியப்பன் (26) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், கேசவன் மற்றும் கன்னியப்பனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வி, அவரது தந்தை மோகன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2