கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர்தப்பினார்கள்.

Update: 2021-08-13 10:45 GMT

கொல்லிமலை, மலைப்பாதையில் 51வது கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவரில் மோதிய சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சேந்தமங்கலம்:

கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர்தப்பினார்கள்.

சென்னை அடுத்த, கொளத்தூரில் உள்ள சுற்றுலா வாகன உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கிருபாகரன் தலைமையில், சங்க உறுப்பினர்கள் 60 பேர், 4 வேனில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். கொல்லிமலையில் உள்ள பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு, சம்பவத்தன்று மாலை 6 மணி அளவில் அனைவரும் சென்னை புறப்பட்டனர்.

70 கொண்டை ஊசி வளைவுகள்  கொண்ட மலைப்பாதையில், 4 வேன்களும் ஒன்றன் பின் ஒன்றாக சென்றது. அப்போது லேசாக மழை பெய்தது. டிரைவர் செந்தில்குமார் என்பவர் ஓட்டிச்சென்ற வேன் 51வது கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேனில் அமர்ந்து பயணம்  செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னால் வந்த வேனில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, மற்றொரு வேனில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு வந்த வாழவந்திநாடு போலீசார் சாலையில் கவிழ்ந்த வேனை மீட்டனர். இச்சம்பவத்தால் கொல்லிமலை மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News