கொல்லிமலையில் திருச்செங்கோடு தொழிலாளி திடீர் உயிரிழப்பு
திருச்செங்கோட்டை தொழிலாளி கொல்லிமலையில் திடீரென உயிரிழந்தார்.
திருச்செங்கோட்டை தொழிலாளி கொல்லிமலையில் திடீரென உயிரிழந்தார்.
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (50), தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கொல்லிமலைக்கு சென்றார். அப்போது அரப்ப ளீஸ்வரர் கோயில் அருகில் உள்ள ஒரு கொட்டகையில் அனைவரும் தங்கியிருந்தனர். இந்த நிலையில் சண்முகசுந்தரம் தனக்கு உள்ள, குடிப்பழக்கத்தால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்றும், குடியை நிறுத்துவதற்கு, கொல்லிமலையில் கையில் கயிறு கட்டிச் செல்லவேண்டும் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். அடுத்த நாள் காலையில் கயிறு கட்டிக் கொள்ளலாம் என்று நண்பர்கள் கூறியுள்ளனர். அடுத்த நாள் காலை தூங்கிக் கொண்டிருந்த, சண்முகசுந்தரத்தை எழுப்பியதில் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் திடீரென இறந்து கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் சண்முகசுந்தரம் கொல்லிமலைக்கு வரும்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததாகவும், அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என்றும் தெரிகிறது. தொழிலாளி திடீர் சாவு குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.