சேந்தமங்கலம் அருகே மண் கடத்திய லாரியை மாவட்ட கலெக்டர் மடக்கிப்பிடித்தார்

சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரியை மாவட்ட கலெக்டர் மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தார்.

Update: 2021-06-23 03:45 GMT

சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரியை மாவட்ட கலெக்டர் மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயா சிங் தனக்கு வரும் தகவல் அடிப்படையில் நேரடியாக களத்துக்கு சென்று நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

சம்பவத்தன்று அவர் கொல்லிமலை தாலுக்கா பகுதிக்கு ஆய்வுப் பணிக்காக சென்றார். மாலையில் அவர் காரில் நாமக்கல் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம்புதூர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக மண் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி வேகமாக சென்றது. கலெக்டர் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது உரிய அனுமதியின்றி அந்த லாரியில் மண் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி அந்த லாரியை பறிமுதல் செய்து வழக்குத் தொடர போலீசாருக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News