பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது

சேந்தமங்கலம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலக்ட்ரீஷியன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-12-30 01:15 GMT

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சரண்ராஜ் (30), எலக்ட்ரீஷியன். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையெ, பேளுக்குறிச்சி பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வரும் ஒரு மாணவிக்கு சரண்ராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியிடம் சரண்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி, அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவரது பெற்றோர் பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில்,  போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் எலக்ட்ரீஷியன் சரண்ராஜிடம் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Tags:    

Similar News