மாரடைப்பால் விவசாயி பலி: அதிகாரிகள் மீது போலீசில் புகார்

சேந்தமங்கலம் அருகே விவசாயி இறப்புக்கு மன உளைச்சலே காரணம், லால் விவசாயி உயிரிழந்தார். அதற்கு காரனமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.;

Update: 2021-07-29 03:15 GMT

சேந்தமங்கலம் அருகில் அடுத்துள்ள சிவியாம்பாளையம்,  குடித் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (53) விவசாயி. இவரது மனைவி லோகாம்பாள் (42). இவர்களுக்கு சோபிகா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று காலை, சுப்பிரமணிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை லோகாம்பாள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். மாலை 3 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து லோகாம்பாள் சேந்தமங்கலம் போலீஸ்சில் புகார் அளித்திருந்தார். அதில், எங்களது விவசாய நிலம் அருகே நீர் ஓடை புறம்போக்கு உள்ளது. அதனை பஞ்சாயத்து நிர்வாகத்தினர், ஒருதலைபட்சமாக அளவீடு செய்ததால் எனது கணவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட அவர், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரது சாவுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சேந்தமங்கலம் போலீஸ் எஸ்.ஐ சந்திரன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News