சேந்தமங்கலம் அருகே பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை
சேந்தமங்கலம் அருகே செல்போனில் விளையாடியதாக பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள உள்ள மிதிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் கமல் (47). இவருடைய மகள் கயானா (13). இவர் பேளுக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்த கயானா செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட பெற்றோர் படிக்கிற நேரத்தில், ஏன் செல் போன் பார்க்கிறாய் என்று கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த கயானா திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தீக்காயங்களுடன் துடித்த கயானாவை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பல நாட்களாக அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கயனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.