சமத்துவபுர வீடுகள் சீரமைப்பு பணி: எம்.பி. ராஜேஷ்குமார் ஆய்வு

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள, வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ராஜேஷ்குமார் எம்.பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2022-09-18 02:45 GMT

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் எம்.மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தில் வீடுகள் சீரமைப்பு பணிகளை ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டியில் 1998-99 ஆம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டு 100 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் உத்தரவின்படி சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வீடுகளின் தற்போதைய நிலைக்கேற்ப பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, சீரமைத்து வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இப்பணிகளை பார்வையிட ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் வருகை தந்தார். சமத்துவபுரம் முன்பு உள்ள பெரியாரின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் ரூ.50,000 வரை மதிப்பிட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், பயனாளிகள் ஜெயராமன், வேல்முருகன் மற்றும் அவர்களது குடும்பத்தனருடன் கலந்துரையாடினார்.

அனைத்து வீடுகளிலும் பணிகளை விரைவில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, எருமப்பட்டி பிடிஓ பிரபாகரன், அட்மா குழுத்தலைவர் பாலசுப்பிரமணியன், மேட்டுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News