ராமநாதபுரம்புதூர் மாரியம்மன் கோயில் தீக்குண்டம் இறங்கும் விழா

ராமநாதபுரம்பதூர் மாரியம்மன் கோயில் விழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

Update: 2022-04-26 02:00 GMT

ராமநாதபுரம்புதூர் மாரியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

ராமநாதபுரம்பதூர் மாரியம்மன் கோயில் விழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம்புதூரில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஒரு வாரமாக சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு தினசரி அபிசேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவில் முக்கிய நிகழ்வாக தீக்குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. கோயில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் பூசாரி முதலில் தீக்குண்டம் இறங்கினார். தொடர்ந்து திரளான ஆண்களும், பெண்களும் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சிலர் கைக்குழந்தைகளுடன் தீக்குண்டம் இறங்கினார்கள். பின்னர் சாமிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன.

Tags:    

Similar News