முத்துகாப்பட்டி கிராமத்தில் போலீஸ் கண்காணிப்பு டவர் திறப்பு விழா

முத்துகாப்பட்டி கிராமத்தில் போலீஸ் கண்காணிப்பு டவரை ஓய்வுபெற்ற போலீஸ் ஐஜி திறந்து வைத்தார்.;

Update: 2022-01-28 08:00 GMT

முத்துகாப்பட்டி கிராமத்தில் போலீஸ் கண்காணிப்பு டவரை ஓய்வுபெற்ற போலீஸ் ஐஜி பாரி திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், முத்துகாப்பட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பஞ்சாயத்து அலுவலகம் அருகே கண்காணிப்பு டவர் அமைக்கப்பட்டு, அங்கு கேமரா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பஞ்சாயத்து தலைவர் அருள்ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

அமெரிக்க தொழிலதிபர் செல்வம், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற போலீஸ் ஐஜி பாரி சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்டு, கண்காணிப்பு டவரை திறந்து வைத்துப் பேசினார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பிடிஓக்கள் குணாளன், பிரபாகரன், சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் செல்வராஜன், கேமரா ஸ்பான்சர்கள் சாந்தி ராஜ்குமார், தினேஷ் விஜய் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் பஞ்சாயத்து துணைத்தலைவர் வரதராசு நன்றி கூறினார்.

Tags:    

Similar News