சேந்தமங்கலம் அருகே புதிய கொரோனா சிகிச்சை மையம் : அமைச்சர் திறந்தார்

சேந்தமங்கலம் அருகே அரசு கல்லூரியில் புதிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

Update: 2021-05-27 12:34 GMT

சேந்தமங்கலம் அருகே அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கொரோனா சிகிச்சை மையத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர். மெகராஜ், எம்எல்ஏ பொன்னுசாமி, மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 15 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் புதிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில்  கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு நன்கொடையாளர் ராஜேஸ்குமார் மூலம் பெறப்பட்ட நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிப்பதற்கான 100 பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள், மாஸ்க்குகள், நோய்த்தொற்று தடுப்பு கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவ அலுவலரிடம் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நன்கொடையாளர் ராஜேஷ்குமார் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை  தலைமை டாக்டர் சாந்தியிடம் வழங்கினார். நிகழ்ச்சிகளில் நாமக்கல் ஆர்டிஓ கோட்டைகுமார், பிஆர்ஓ சீனிவாசன், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமாலா, துணைத்தலைவர் கீதா, ஒன்றியக் குழு உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் சேர்மன் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News