நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோவில் கைது
நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;
நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் தாதம்பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவனும், வீசாணம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த, 3ம் தேதி சிறுமி மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் மீட்டு விசாரனை நடத்தினர். பின்னர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில், மைனர் பெண்ணை கடத்திச் சென்றதுடன், குழந்தை திருமணம் நடத்தி வைத்து, பாதுகாப்பு மற்றும் பணம் கொடுத்து உதவிய பெயிண்டர் விவேக் (28), லாரி உரிமையாளர் ரஞ்சித்குமார் (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.