சேந்தமங்கலத்தில் கட்டிட மேஸ்திரி வன்கொடுமை சட்டத்தில் கைது
சேந்தமங்கலம் நகரில் கட்டிட மேஸ்திரி வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.;
சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சுடையாம்பட்டி புதூர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (30). கட்டிட மேஸ்திரி. சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து, அருந்ததியர் காலனியை சேர்ந்த விக்னேஷ் (27). இவர்கள் 2 பேரும் ரோட்டில் செல்லும்போது மோட்டார் சைக்கிள்கள் லேசாக உரசிக்கொண்டன.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின் போது மேஸ்திரி பிரகாஷ், விக்னேஷின் சாதி பெயரை சொல்லி திட்டியதாக அவர் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து விக்னேஷ் சேந்தமங்கலம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி பிரகாசை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.