சேந்தமங்கலத்தில் கோயில் பூசாரிகளுக்கு 3 நாட்கள் ஆகம பூஜை பயிற்சி

ஆகம பயிற்சியில், 15 மாவட்டங்களைச் சேர்ந்த 95 கோயில் பூசாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்

Update: 2021-08-31 02:45 GMT

சேந்தமங்கலத்தில் நடைபெற்ற கோயில் பூசாரிகளுக்கான ஆகம பூஜை பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மாவட் திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் கோயில் பூசாரிகளுக்கு 3 நாட்கள் ஆகம பூஜை பயிற்சி நடைபெற்றது. 

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் தமிழ்நாடு கிராமக் கோயில் பூசாரிகள் சமூக நலப்பேரவையின் சார்பில் இரண்டாம் ஆண்டு ஆகம பூஜை பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது. நிறைவு விழாவில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர்  கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில், பேரவையின் நிர்வாக அறங்காவலர் துரை ரமேஷ், ஆசிரியர் கோவிந்தராஜ சாஸ்திரிகள், கிராமக் கோயில் பூசாரிகள் சமூக நலப்பேரவை பயிற்சியாளர் ஸ்ரீ திருமால், அனுகிரஹக மந்த்ராலய நிறுவனர் தங்கராசு, தருமபுரி சதா சிவானந்த சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் பேசினார்கள்.ஆகம பயிற்சியில், 15 மாவட்டங்களைச் சேர்ந்த 95 கோயில் பூசாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதனுடன், மந்திர தீட்சை 71 பேரும், பூணூல் தீட்சை 39 பேரும், சமய தீட்சை 45 பேரும் பெற்றனர். நிழ்ச்சியில், சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார், ராசிபுரம் ஒன்றியச் செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News