சேந்தமங்கலம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, 2 பேர் கைது
சேந்தமங்கலம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சல் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன்(58). தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
அதே பகுதியை சேர்ந்தவர் விஜய் என்கிற அருள் (61). இவர்கள் 2 பேரும், அப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாமிநாதன், விஜய் என்கிற அருள் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியர் உள்பட 2 பேர் கைதாகி இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.