பொட்டிரெட்டிப்புதூர் மாரியம்மன் திருவிழாவில் பால் குட ஊர்வலம்
சேந்தமங்கலம் அருகே, பொட்டிரெட்டிப்பட்டி புதூர் மாரியம்மன் திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.;
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி புதூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பொட்டிரெட்டிபட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு இருந்து துவங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகளின் வழியாக மகா மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது.
சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசராதம் வழங்கப்பட்டது.