பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகளுடன் மல்லுக்கட்டிய 300 காளையர்கள்

பொட்டிரெட்டிபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகளுடன் 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.

Update: 2022-01-29 08:45 GMT

சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்கிய ஜல்லிக்கட்டு வீரர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டியில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, நாமக்கல் ஆர்டிஓ இளவரசி, எருமப்பட்டி பிடிஓ குணாளன், மாவட்ட பிஆர்ஓ சீனிவாசன் ஆகியோர் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.

போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட 700 காளைகள் வரிசை எண்படி வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை அடக்கி பரிசுகளைப் பெற்றனர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், வெள்ளிக்காசுகள், பீரோ, கட்டில், சைக்கிள், குடம், டைனிங் டேபிள் உள்ளிட்ட ஏராளமான பரரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருத்துவக்குழுவினர் முகாம் அமைத்து காகைளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதணை செய்த பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். 600க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து வருகை தந்த திரளான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News