சேந்தமங்கலம்: மக்கள் குறைதீர் முகாமில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், அமைச்சர் மதிவேந்தன் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2021-07-21 11:30 GMT

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் நடந்த மக்கள் குறைதீர் முகாம்களில், அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அருகில் எம்எல்ஏ பொன்னுசாமி

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்களில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நாமக்கல் சப்-கலெக்டர் கோட்டைக்குமார், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

சிறப்பு முகாம்களில், சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முதியவர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, ரேசன் கார்டு, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 2,962 கோரிக்கை மனுக்களைப்பெற்ற அமைச்சர் அவற்றை உரிய அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், சிறப்பு முகாம்களில் 117 பேருக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமாலா, துணைத் தலைவர் கீதா வெங்கடேசன், தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News