செல்போன் வாங்கித்தர மறுத்த தந்தை: விரக்தியில் பள்ளி மாணவன் தற்கொலை
எருமப்பட்டி அருகே தந்தை செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்த பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.;
எருமப்பட்டி அருகே தந்தை செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்த பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். டூரிஸ்ட் கார் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மகன் கவின்குமார்(16). இவர் காவக்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கவின்குமார் தனது தந்தையிடம் செல்போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஜெயராஜ் மறுப்பு தெரிவித்து வந்தார்.
இதனால் மனமுடைந்த கவின்குமார் சம்பவத்தன்று, வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கவின்குமார் உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.