கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்

வேளாண்மைத்துறை சார்பில், கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-04 03:45 GMT

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் விவசாயிகளுக்கான கூட்டுப் பண்ணையம் திட்டத்தின்கீழ், உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா தலைமை வகித்து பேசியதாவது: கொல்லிமலை வட்டாரத்தில் கூட்டு பண்ணையம் திட்டம், 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு ஆரம்பிக்கப்பட்டு, ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பவர் டில்லர் வாங்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருவதாகக் கூறினார்.

இக்கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான வரவு-செலவு கணக்குகள் படித்து சரிபார்க்கப்பட்டது. பின்னர், வருமானத்தைப் பெருக்குவதற்காகன திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேளாண் அலுவலர் சத்யபிரகாஷ், துணை அலுவலர் சேகர் முற்றும் முன்னோடி விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News