மோட்டார் சைக்கிள் மோதியதால் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு

Accident in Tamil - மோட்டார் சைக்கிள் மோதியதால், சைக்கிளில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.;

Update: 2022-08-17 02:45 GMT

பைல் படம்.

Accident in Tamil -எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (65) விவசாயி. நேற்று முன்தினம் இரவு பொன்னுசாமி அந்த பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News