வெங்காயம் சாகுபடி: பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு

புதுச்சத்திரம் பகுதியில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-20 03:00 GMT

கோப்பு படம்

இதுகுறித்து, புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பால்ஜாஸ்மீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், புதுச்சத்திரம் வட்டாரத்தில் வெங்காயம் பயிர் காப்பீடு செய்ய,  அரசு அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி, வங்கி கடன் பெறும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின்பேரில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒரு ஏக்கர் வெங்காய பயிருக்கு ரூ.1,920 பிரிமியம் செலுத்த வேண்டும். இதற்கான கடைசி நாளான நவ.30க்குள் பிரிமியம் செலுத்தலாம்.

பயிர் காப்பீடு செய்யும் முன்பு, விண்ணப்பத்துடன், விஏஓ-விடம் அடங்கல், விதைப்புச்சான்று பொற்று, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியம் கட்டணத்தை பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News