கொல்லிமலையில் கலெக்டர் விசிட்: மலைவாழ்மக்கள் வசிப்பிடங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை

கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு ஏதுவாக, அவர்களின் வசிப்பிடம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று டாக்டர்களுக்கு நாமக்கல் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Update: 2021-06-23 12:41 GMT

கொல்லிமலைக்குச் சென்ற நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங், மலைவாழ் மக்கள் வசிப்பிடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கொல்லிமலை பகுதியில் கொரோனா நோய்த்தொற்றின் தன்மை, தடுப்புபணிகள்குறித்தும், குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறதா என்று, அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், 110 தன்னார்வாலர்கள் மூலம் வீடுவீடாக சென்று ஆக்சிஜன் அளவு சரிபார்க்கப்படுகிறது. தற்போது, கொரோனா நோய்த்தொற்றின் பரவல் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, கொல்லிமலை பகுதியை சேர்ந்த அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான வசதிகள் குறித்து அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

கொல்லிமலை பகுதி மாணவ, மாணவிகள் அனைவரும், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பாடங்கள் பயில்வதை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பழங்குடியினா; நலத்துறையினர் உறுதி செய்ய  வேண்டும். கொல்லிமலை பகுதியில் பொதுமக்களின் இருப்பிட அருகே உள்ள அரசு பள்ளிக்கூட கட்டிடம், அரசு கட்டிடங்களில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று,  டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வாசலூர்ப்பட்டி, திண்ணனூர் பகுதியில் பொதுமக்களிடம் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் பற்றி எடுத்துரைத்து, கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, கலெக்டர் வலியுறுத்தினார். ஆய்வின் போது, நாமக்கல் ஆர்டிஓ கோட்டைக்குமார், ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாதேஸ்வரி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராமசாமி, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News