ரெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் ரூ.26 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

ரெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்தார்.;

Update: 2022-05-03 09:45 GMT

ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து ஆண்டவர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் தார் ரோடு அமைக்கும் பணியை, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்தார்.

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து, ஆண்டவர் நகர் பகுதியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகள் துவக்க விழா எருமப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விமலா சிவக்குமார், பெருமாப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், ரெட்டி பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News