சேந்தமங்கலம் அருகே பாவாடையில் தீப்பிடித்து 6 வயது சிறுமி பலி
எருமப்பட்டியில் பாவாடையில் தீப்பிடித்து 6 வயது சிறுமதிபரிதாபமாக உயிரிழந்தார்.;
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, அம்பேத் நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன்; கூலித் தொழிலாளி. இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு தம்பிஷ்கா (6) என்ற மகள் இருந்தார். கடந்த 2ம் தேதி வீட்டின் வெளியே உள்ள விறகு அடுப்பில், சங்கீதா சமையல் செய்து கொண்டிருந்தார். அடுப்பின் அருகே விளையாண்டுகொண்டிருந்த சிறுமதி தம்பிஷ்காவின் பட்டுப்பாவாடையில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.
இதில், தீ உடல் முழுவதும் வேகமாக பரவியதால் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட குடும்பத்தினர், அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி தம்பிஷ்கா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.