எருமப்பட்டி: ஆட்டுக்குட்டி மீட்க முயன்ற முதியவர் கிணற்றில் மூழ்கி பலி

எருமப்பட்டி அருகே கிணற்றில் இருந்த ஆட்டுக்குட்டியை மீட்க முயன்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.;

Update: 2022-03-04 01:15 GMT

எருமப்பட்டி அருகே, உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம் (71). இவர் ஆடு வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர்  பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி லட்சுமி, மகன் வெங்கடாசலம் ஆகியோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர், அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள 90 அடி கிணற்றில் ஆட்டுக்குட்டி கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.

அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில்,  கிணற்றில் 10 அடி தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் அருணாசலத்தின் உடலை மீட்டனர். ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News