தொடர் விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: அருவிகளில் ஆனந்த குளியல்

தொடர் விடுமுறையால் கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2021-12-27 02:45 GMT

கொல்லிமலையில் உள்ள நம்ம அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

தொடர் விடுமுறையால் கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மிகச்சிறந்த இயற்கை சூழல் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1330 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தமலையை அடைவதற்கு 70 குறுகிய கொண்லை ஊசி வளைவுகளை கடந்து மலைப்பாதையில் செல்ல வேண்டும். சுமார் 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு அனுமதிக்கப்படவில்லை.

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்ததாலும், கிறிஸ்துமஸ் விடுமுறையாலும் தற்போது கொல்லிமலைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

சுற்றுலாப்பயணிகள், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், பொட்டானிக்கல் கார்டன், தோட்டக்கலைத் துறைப் பண்ணை, போட் ஹவுஸ், வியூ பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்து குளித்து மகிழ்கின்றனர்.

கொல்லிமலையில் உள்ள அனைத்து தனியார் ஹோட்டல்களும் நிரம்பி வழிகின்றன. புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறையால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. கொல்லிமலையில் இரவில் குளிரின் தாக்கம் அகதிகரித்து காணப்படுகிறது. காலையில் 9 மணிவரை கடும் பணி மூட்டம் ஏற்படுகிது. இதனால் பகலில் செல்லும் வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டே செல்கின்றன. 

Tags:    

Similar News