எருமப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பஸ் டிரைவர் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஓட்டுனர் உயிரிழந்தார்;
எருமப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு போக்குவரத்ததுக்கழக டிரைவர் உயிரிழந்தார்.
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி பஞ்சாயத்து, பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (42). இவர் சேலம் போக்குவரத்து கழக அரசு பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் எருமப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவருடைய தோட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் öய்து வந்தார். சம்பவத்தன்று மதியம் சசிகுமார் தோட்டத்தில் மருந்து தெளிப்பதற்காக கிணற்று அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் எடுத்தார். அப்போது தொட்டி திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகுமார் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நாமக்கல் தீயணைப்பு படை வீரர்கள், கிணற்றில் இறங்கி சசிகுமாரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். எருமப்பட்டி போலீசார் சசிகுமார் உடலைக் கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.