சேந்தமங்கலம் அருகே பாழடைந்த வீட்டில் 830 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சேந்தமங்கலம் அருகே பாழடைந்த வீட்டில் 830 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் தங்கராஜ், முத்துகாப்பட்டி வி.ஏ.ஓ. மோகனப்பிரியா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 13 மூட்டைகளில் 830 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து சேந்தமங்கலம் தாலுகா வழங்கல் அலுவலர் முத்துக்குமாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.