கொல்லிமலையில் கிணற்றில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
கொல்லிமலையில் கிணற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.;
கொல்லிமலையில் கிணற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் திருப்புலி நாடு பஞ்சாயத்து, ஊர்புறம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (46), விவசாயி. இவரது மகன் புருஷோத்தமன் (15). இவர் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையானதால், புருஷோத்தமன் அவரது கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றார். சுமார் 40 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து, புருஷேதத்தனும் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிழந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து புருஷோத்தமனின் உடலை மீட்டனர். தகவலின் பேரில் செங்கரை போலீசார் அங்கு சென்று புருஷோத்தமனின் உடலை, பிரேத பரிசோதணைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிகக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.