எருமப்பட்டி: உலக நன்மை வேண்டி சிவன் கோவிலில் 108 சங்காபிசேகம்

மூலவருக்கும், நந்தி பகவானுக்கும், நல்லெண்ணை, திருமஞ்சல், பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-08-24 02:00 GMT

முட்டாஞ்செட்டியில் உலக நன்மை வேண்டி 108 சங்காபிசேகம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே முட்டாஞ்செட்டி கிராமத்தில், பிரசித்திபெற்ற வன்னிமரம் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக நன்மை வேண்டி 108 சங்காபிசேகம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கும், நந்தி பகவானுக்கும், நல்லெண்ணை, திருமஞ்சல், பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை செய்யப்பட்டது. பின்னர் 108 வலம்புரி சங்குகளை வைத்து, உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பூஜை செய்யப்பட்டது. எருமப்பட்டி வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News