கொல்லிமலையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
சேந்தமங்கலம் அருகே 10 வயது சிறுமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.;
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் தின்னனூர் நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் வெங்கடேஷ் ( 19). அதே பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். அந்த சிறுமியிடம், வெங்கடேஷ் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். மிரட்டலுக்கு பயந்து தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி வெளியில் சொல்லாமல் இருந்தாள். இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமியிடம் அவரது பெற்றோர் கேட்டபோது அவர் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்தனர்.
இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.