கொல்லிமலையில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்: குளிக்க அனுமதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!
கொல்லிமலையில் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்க அனுமதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
கொல்லிமலையில் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்க அனுமதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, 2 மாதங்களுக்கு பிறகு கூடுதல் தளர்வுகள்அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களுக்கு இபாஸ் இல்லாமல் செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளதால், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தர துவங்கியுள்ளனர். கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் இருந்து 70 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மலைக்கு வந்த அவர்கள், புரான சிறப்புப் பெற்ற கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோயில், அறப்பளீஸ்வரர் ஆகிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தாவரவியல் பூங்கா, வியூ பாயின்ட், வாசலூர்ப்பட்டி படகு இல்லம் ஆகிவற்றை கண்டு களித்தனர். கடந்த ஒரு வாரமாக கொல்லிமலையில் தொடர்ந்து கனமழை பெய்ததால் மலையில் உள்ள மரங்கள் செடிகொடிகள் பசுமையாக, கண்களுக்கு ரம்மியாக காட்சியளிக்கிறது. கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை, மாசிலாஅருவி, நம்ம அருவி ஆகிய நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்கால் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிசெல்கின்றனர்.
2 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகும், மிகவும் குறைவான சுற்றுலா பயணிகள் மட்டுமே கொல்லிமலைக்கு வந்திருந்ததால் அங்குள்ள பழக்கடைகள், மளிகைக் கடைகள், ஓட்டல் கடைகள் மற்றும் லாட்ஜ்களில் கூட்டம் இல்லை. கொல்லிமலையில் விளையும் பலாப்பழம் மற்றும் அண்ணாசி பழங்கள் விற்பனை மிகவும் டல்லடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் ஆடி மாதம் பிறந்ததும் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.