வீச்சு அரிவாளுடன் மிரட்டல் - கைது செய்ய கோரிக்கை

சேந்தமங்கலத்தில் அரிவாளுடன் மிரட்டல் விடுக்கும் நபரை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை.;

Update: 2021-01-18 10:28 GMT



நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த வெண்டாங்கி பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வீச்சருவாள் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் வீச்சாரிவாளுடன் சுற்றி திரியும் நபர் மீது சேந்தமங்கலம் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News