மர்ம நபர்களால் ஏரியின் மதகு திறப்பு: விளைநிலங்கள் பாதிப்பு

இராசிபுரம் அருகே மர்ம நபர்களால் ஏரியின் மதகு திறப்பு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-22 03:30 GMT

இராசிபுரம் அருகே செம்மாண்டப்பட்டி ஏரியின் மதகை மர்ம நபர்கள் திறந்து விட்டதால், அருகில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர்.

இராசிபுரம் தாலுக்கா, செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்தில் உள்ளது செம்மாண்டப்பட்டி ஏரி. 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு வெண்ணந்தூர் பகுதியில் இருந்து மழைநீர் வரும். தற்போது பெய்துள்ள மழையால் செம்மாண்டப்பட்டி ஏரி நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செம்மாண்டப்பட்டி ஏரி நிரம்பி, உபரி நீர் ஓ.சவுதாபுரம் பகுதியில் உள்ள சேமூர் ஏரிக்கு செல்வது வழக்கம். சேமூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் உபரிநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், செம்மாண்டப்பட்டி ஏரியில் உள்ள மதகை மர்மநபர்கள் திறந்து விட்டுள்ளனர். கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல், அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏரியில் இருந்து வரும் தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்துள்ளது. இதனால் அப்ப பகுதியில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம், ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சேமூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தண்ணீரால் பயிர்கள் மூழ்கியதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News