அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ராசிபுரம் அருகே பயிற்சி முகாம்
Training Camp - அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கு, ராசிபுரம் அருகே இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.;
Training Camp -இதுகுறித்து, பாஜக மத்திய திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் கூறியுள்ளதாவது:
அக்னிவீர் -2022 திட்டத்திற்கான இலவசப் பயிற்சி முகாம், ராசிபுரம் அருகே, ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள கஸ்தூரிபா காந்தி கல்லூரி வளாகத்தில் வருகிற 17ம் தேதி துவங்கி 28ஆம் தேதி வரை நடைபெறும். இந்த முகாமில் லெப்டினனட் என்.கே.ராமன், மேஜர் மதன்குமார் ஆகியோர் பங்கேற்று பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனர். பயிற்சியின்போது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ, நோட்டு, பேனா, பென்சில், ரப்பர் மற்றும் தங்குவதற்குத் தேவையான பொருட்கள் கொண்டுவர வேண்டும்.
ராணுவத்தில் சேர்வதற்கான கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். விமானப்படைக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். 17.5 வயதிற்கு மேற்பட்டு 23 வயது வரை உள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம். உயரம் 166 செ.மீ. இருக்க வேண்டும். மருத்துவச்சான்றிதழ், விளையாட்டுச் சான்றிதழ், என்சிசி சான்றிதழ் இருப்பின் கூடுதல் தகுதியாகும். ஆண், பெண் இருவருக்கும் தங்குவதற்கு இடவசதி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2