பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு
ராசிபுரம் அருகே வெண்ணந் தூரில் மண் பாரம் ஏற்றிய டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
ராசிபுரம் தாலுக்கா வெண்ணந் தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தச்சன்காடு பகுதியைச் சேர்ந்த விஜயராகவன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திலிருந்து நெடுஞ்சாலை துறை மூலம் பணிகளுக்காக டிராக்டர் மண் அள்ளும் பணி நடைபெற்றுக்கொண்டுள்ளது.
டிராக்டரை டிரைவர் சுப்பிரமணி ஓட்டி வந்தார். டிராக்டரின் பின்னால் மண் லோடின் மீது கவிதா (42), செல்வி (32) ஆகிய பெண் தாழிலாளர்கள் அமர்ந்து வந்தனர். அளவுக்கு அதிகமான மண் பாரம் காரணமாக மேடான பகுதியில் சென்ற போது நிலை தடுமாறிய டிராக்டர் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் கீழே விழுந்த படுகாயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வி ராசிபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிராக்டர் டிரைவர் சுப்பிரமணி லேசான காயங் களுடன் ராசிபுரம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வருகி றார். ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.