இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் திருவள்ளவர் தினம் கொண்டாட்டம்
இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் திருவள்ளவர் தினம் கொண்டாடப்பட்டது.
இராசிபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு தேசிய மாணவர் படை அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் சுப்பிரமணியம், பேராசிரியர்கள் துரைசாமி, மாதேஸ்வரன், நகராட்சி நிர்வாக இயக்குநரக கண்காணிப்பாளர் மாதேஸ்வரன், மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளர் பெரியசாமி, வக்கீல் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி என்சிசி அமைப்பின் சார்பில் தேசிய இளைஞர் வார விழா திருவள்ளுவர் கல்லூரியில் நடைபெற்றது. இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் நடைபெற்ற விழாவில், ஈரோடு பட்டாலியன் நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி என்.சி.சி. அலுவலர் சிவக்குமார், கந்தசாமி கண்டர் கல்லூரி என்.சி.சி. அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் செயலர் சுவாமி எதாத்மானந்தா கலந்துகொண்டு, இந்திய இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறிய செய்திகள் என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கந்தசாமி கண்டர் கல்லூரி என்சிசி பொறுப்பு அலுவலர் வெண்ணிலா நன்றி கூறினார்.