மாநில அளவிலான என்சிசி முகாம்: இராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான என்சிசி முகாமில் இராசிபுரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.;

Update: 2021-11-28 04:15 GMT

மாநில அளவிலான என்சிசி முகாமில் சிறப்பிடம் பெற்ற இராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் மணிமேகலை பாராட்டி பரிசு வழங்கினார்.

மாநில அளவிலான என்சிசி பட்டாலியன் மாணவர் படை வருடாந்திர முகாம், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. கமாண்டிங் ஆபீசர் அனில் வர்மா முகாமிற்கு தலைமை வகித்தார்.

முகாமில், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி என்சிசி மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து என்சிசி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

இதில், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர் யோகேஸ்வரன், மற்றும் மாணவி சுகுணா ஆகியோர் சிறந்த என்சிசி பயிற்சி மாணவர்களாக தேர்வு செய்யபட்டனர்.

மேலும், இரண்டாமாண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி யாழினி துப்பாக்கி சுடும் பயிற்சியில் இரண்டாம் இடம் பெற்று பதக்கங்களை பெற்றார். என்சிசி முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் மணிமேகலை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Tags:    

Similar News