இராசிபுரத்தில் சித்த மருத்துவ திருவிழா: எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு

இராசிபுரத்தில், 5வது சித்த மருத்துவ திருவிழாவை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

Update: 2021-12-24 02:00 GMT

இராசிபுரத்தில் நடைபெற்ற சித்த மருத்துவ திருவிழாவில், பொதுமக்களுக்கு மூலிகைச் செடிகளை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில்,  அகத்தியரின் பிறந்த நாளை முன்னிட்டு, 5வது சித்த மருத்துவத் திருவிழா இராசிபுரத்தில் நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமைவகித்து, 300 மூலிகைகள் மற்றும் மூலிகை பொருட்களை கொண்ட கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பயானாளிகளுக்கு மூலிகைச் செடிகளையும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினையும் வழங்கினார்.

நிகழ்ச்சியை ஒட்டி நடைபெற்ற மருத்துவ முகாமில்,  பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், வர்ம மருத்துவம், தொக்கண மருத்துவம் போன்ற சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சைகள் மூலமாக 1210 பொதுமக்கள் பயன்பெற்றனர். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மற்றும் இராசிபுரம் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து நடத்திய 5-வது சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணியை எம்எல்ஏ ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்,  இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன், நகர திமுக செயலாளர் சங்கர், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ஜெயந்தி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணன், சித்தா டாக்டர்கள் வெங்கடபிராகசம், பூபதி ராஜா, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் குணசேகரன், ரோட்டரி சங்க பிரமுகர்கள் அன்பழகன், சுரேந்தர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News