ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: வெண்ணந்தூர் ஒன்றியத்தில் திமுகவினர் ஆலோசனை
உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு வெண்ணந்தூர் ஒன்றிய திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
வெண்ணந்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி பேசினார். அருகில் அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.
நாமக்கல் மாவட்டம் ஊராட்சிக்குழு 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் ஏ.ஆர். துரைசாமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையொட்டி வெண்ணந்தூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர், ராஜேஷ்குமார் எம்.பி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார்.
அப்போது, தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை திமுக பொறுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று எடுத்துக்கூறி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்றார்.
வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி, முன்னாள் எம்.பி. சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, தொகுதி பொறுப்பாளர் பாலச்சந்திரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, பட்டணம் நல்லதம்பி, கட்டனாச்சம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.